இந்தியாவில் முழுவதும் இயற்கை எரிவாயு விலையை இருமடங்கு  உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது முகேஷ் அம்பானிக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடிவு என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. அதுமட்டுமின்றி மத்திய அரசை முகேஷ் அம்பானிதான் பின்னணியில் இருந்து இயக்குகிறார் என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று காலை பதிலளித்துள்ளார்.

மத்திய அரசை பின்னணியில் இருந்து முகேஷ் அம்பானி இயக்குகிறார் என்பது தவறான குற்றச்சாட்டு என்றும், உறுதியளித்ததை விட குறைவாக எரிவாயு உற்பத்தி செய்ததற்காக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பெரும் தொகையை அபராதம் விதித்து மத்திய அரசு உத்தரவு இட்டிருந்ததை சுட்டிக்காட்டிய ப.சிதம்பரம், உயர்த்தப்பட்ட எரிவாயு விலையைத் தருவதை உறுதிப்படுத்த ரிலையன்ஸிடமிருந்து வங்கி உத்தரவாதத்தை மத்திய் அரசு பெற்றுள்ளது என்றும் ப.சிதம்பரம் விளக்கம் கூறியுள்ளார்.

மேலும் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை குறைக்க முடியாது என்றும், அதே நேரத்தில் இந்த முடிவு யாருக்கும் சாதகமாக எடுக்கப்பட்ட முடிவு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply