நம்முடைய சருமத்தின் எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணைய் பசையை வெளியேற்றுவதே முகப்பருக்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம். முகம், கழுத்து, மார்பு மற்றும் முதுகு பகுதிகளில் இவை அதிக அளவில் காணப்படுகின்றன. முகப்பருக்களை கிள்ளுவதால் அவை மற்ற இடங்களுக்கு பரவுவது மட்டுமில்லாமல் அவை வடுக்களாக மாறிவிடும் வாய்ப்புகள் உள்ளன. முகப்பருக்களை நீக்குவதற்கான க்ரீம்களை நிறைய இருந்தாலும் கைவைத்தியத்தின் மூலமாக இதை நீக்குவதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதை தவிர்த்திடலாம்.

முகப்பருக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்

* எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணை பசையை சுரந்திடும்போது.
* உடலில் ஹார்மோங்களின் அளவில் பாதிப்புகள் ஏற்படும்போது.
* லித்தியம், ஐயோடைட், புரோமைட் போன்றவைகள் நிறைந்த மருந்துகளை உட்கொள்ளும்போது.
* மன அழுத்தம் ஏற்படும்போது.

முகப்பருக்களை நீக்குவதற்கான வழிகள்

* சிறிதளவு இஞ்சியை துருவி தேனில் அரை மணிநேரம் ஊறவைக்கவும். பின்பு ஊறவைத்த இஞ்சியை முகப்பருக்களில் வைத்திடுங்கள். இவ்வாறு ஒருவாரம் தொடர்ந்து செய்வதன்மூலம் முகப்பருக்கள் நீங்கிடும்.

* வேப்பிலை மற்றும் துளசி இலையுடன் ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்த விழுதை முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* வேப்பிலை, சந்தனம் மற்றும் முல்தானி மண்ணுடன் பன்னீர் சேர்த்த கலவையை முகப்பருக்களில் தடவி 15 இமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* புதினா சாறுடன் சந்தனத்தை சேர்த்த கலவையை முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* புதினா இலைகள், வேப்பிலைகள் மற்றும் துளசி இலைகளுடன் எலுமிச்சை சாறு சேர்த்து விழுதாக அரைத்து, முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* துளசி இலைகளை விழுதாக அரைத்து முகப்பருக்களில் தடவி காய்ந்த பிறகு முகத்தை கழுவுங்கள்.

* சிறிதளவு கஸ்தூரி மஞ்சளுடன் பன்னீர் சேர்த்து முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* புதினா இலைகள், துளசி இலைகள் மற்றும் வேப்பிலைகளுடன் தேன், பன்னீர் சேர்த்து விழுதாக அரைத்து முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* கஸ்தூரி மஞ்சளுடன் தேன் சேர்த்து முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* முட்டையின் வெள்ளை கருவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அதை முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* சமமான அளவில் எலுமிச்சை சாற்றுடன் பன்னீரை சேர்த்து முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய் (அ) சந்தனம் சேர்த்து முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* தேனுடன் பொடித்த இலவங்கத்தைச் சேர்த்து இரவில் படிக்க செல்லும்முன் முகப்பருக்களில் தடவவும்.

* நன்றாக மசித்த அப்பிளுடன் தேனைச் சேர்த்து முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* கொத்தமல்லி இலைகளின் சாறுடன் மஞ்சள் சேர்த்து முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* விழுதாக அரைத்த பூண்டை முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* காய வைத்து பொடி செய்த மாதுளை தோலுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* வெந்தய கீரை இலைகளை விழுதாக அரைத்து முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* எலுமிச்சை சாறுடன் கடலெண்ணெய் மற்றும் சந்தனம் சேர்த்த கலவைஅயை முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* விழுதாக அரைத்த பூண்டுடன் தேவையான அளவு தயிர் சேர்த்து முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* துளசி இலைகளை நீரில் கொதிக்க விட்டு, ஆறிய பிறகு அந்நீரினால் முகத்தை கழுவவும்.

* ஊறவைத்து விழுதாக அரைத்த வெந்தயத்தை முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

* ஊற வைத்து அரைத்த ஓட்ஸுடன் சிறிதளவு தேன் சேர்த்து முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

முகப்பருக்கள் ஏற்படாமல் தடுத்திட சில வழிகள்

* காய்கறி மற்றும் பழங்களின் சாறினை அருந்திடுங்கள்.
* வைட்டமின் ஏ நிறைந்த பொருட்களை உணவினில் சேர்த்துடுங்கள்.
* எண்ணெயில் பொறித்த கொழுப்புச் சத்து நிறைந்த உணவு பொருட்களை தவிர்த்திடுங்கள்.
* அதிக அளவில் சர்க்கரை சேர்த்த இனிப்புகளை உடகொள்ளுவதை தவிர்த்திடுங்கள்.
* தினமும் உங்களுடைய உணவினில் சிறிதளவு பூண்டை சேர்த்துக்கொள்ளுங்கள்.
* பசலை கீரை, தோட்டக் கீரைகள் மற்றும் காளானை உணவினில் சேர்த்திடுங்கள்.

Leave a Reply