சென்னை தாம்பரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உலக ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு நேற்று அம்பேத்கார் தலித் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

ஹங்கேரி நாட்டில் நடந்த உலக ஆணழகன் போட்டியில் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் மணி என்பவர் 90கிலோ எடை பிரிவில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி தங்கப்பதக்கம் பெற்றார். சென்னையை சேர்ந்த ஒருவர் தங்கப்பதக்கம் பெற்று இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்ததால் அவருக்கு பாராட்டு விழா நடத்த சென்னையை சேர்ந்த அம்பேத்கார் தலித் கூட்டமைப்பு முடிவு செய்தது. இந்த பாராட்டு விழா நேற்று சென்னை தாம்பரத்தில் வெகு விமரிசையாக நடந்தது.

பாராட்டு விழாவில் பேசிய ராஜேந்திரன், அடுத்த வரவிருக்கும் மிஸ்டர் இந்தியா உள்பட பல சர்வதேச போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்க்க விரும்புவதாகவும், அதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்யவேண்டும் என்றும் கூறினார். 41 வயதான ராஜேந்திரன் 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் நடக்கவிருக்கும் அடுத்த உலக ஆணழகன் போட்டியிலும் வெற்றி பெற்று பதக்கம் பெற்றிட விழாவுக்கு வந்தவர்கள் வாழ்த்தினார்கள்.

Leave a Reply