shadow

சச்சின், ரேகாவுக்கு எம்பி பதவி தேவையா?

எம்பி பதவி என்பது பொதுமக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு உள்ள ஒரு அதிகாரம் மிக்க பதவி. இந்த பதவியின் மூலம் பல நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு செய்யலாம்

ஆனால் ராஜ்யசபா எம்பி பதவியை பெற்ற சச்சின் தெண்டுல்கரும், நடிகை ரேகாவும் இந்த பதவியை சுத்தமாக பயன்படுத்தவில்லை. இவர்கள் இருவருமே வெறும் 10%க்கும் குறைவாகவே நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இருவருமே தங்கள் துறைகளில் சாதனை படைத்தவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதே நேரத்தில் எம்பி போன்ற பதவிகளை பெற்று வீணடிப்பதில் யாருக்கு லாபம்? நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ளாமல் எந்த கேள்வியும் கேட்காமல் இருப்பவர்களுக்கு எம்பி பதவி எதற்கு? இனிமேலாவது அரசியல் கட்சிகள் சரியான நபர்களை தேர்வு செய்து எம்பி பதவியை வழங்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

Leave a Reply