மதுரையில் பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களை அவர்கள் இஷ்டத்திற்கு ஏற்றிக்கொள்வதை கண்டித்து நேற்று மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

நேற்று  ஜில்லா, வீரம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆன மதுரை தியேட்டர்களில் டிக்கெட்டுகளின் விலை ரூ.200 முதல் ரூ.500 வரை விற்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் தியேட்டரில் கொடுக்கும் டிக்கெட்டுக்களில் வெறும் 50 ரூபாய்தான் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதை போலீஸாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே ஜில்லா படத்துக்கு வந்த மாணவர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு படம் பார்க்காமல் நேராக கலெக்டர் அலுவலகம் சென்று சம்மந்தப்பட்ட தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தனர்.

மதுரையில் சகாயம் கலெக்டராக இருந்தவரை ரூ.50 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் மாற்றலாகி சென்றவுடன் புதுப்படங்களுக்கு மிக அதிக விலையில் டிக்கெட் கட்டணம் பார்வையாளர்களிடம் இருந்து வாங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

சம்மந்தப்பட்ட தியேட்டர் மீது சில அதிகாரிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதால் மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply