shadow

bee8fb28-99a8-4fd0-8caa-c3d41bd28da8_S_secvpf

கோவைக்காய், கோவை இலை மற்றும் கோவை பூ அனைத்தையும் சமஅளவு எடுத்து ஒன்றாக ஓரு ஒருபாத்திரத்தில் போட்டு அதில் தேவையான நீரை சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவைக்க வேண்டும், கொதித்த பின் அதை வடிகட்டியால் வடிகட்டி நீரைமட்டும் தனியாக எடுத்து சேகரித்து கொள்ளுங்கள். சுவைக்காக சிறிது தேனை சேர்த்துக்கொள்ளுங்கள்.

இப்பொழுது வாய்ப்புண் டானிக் தயார். இதை சித்த வைத்தியத்தில் தீநீர் இறக்குவது என்று கூறுவார்கள். இந்த தீநீர் வயிற்றுப்புண், வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக சிறந்த டானிக்காகும். சில நேரங்களில் மற்ற நோயின் காரணமாக மருந்துகளை சாப்பிடுவதால் அலர்ஜி அல்லது வேறு சில காரணங்களால் நம் வாய் வெந்துபோய்விடும், அந்த சமயங்களிலும் இதை பயன்படுத்தலாம்.  

கோவைக்காய் வெறும் பச்சையாகவே சாப்பிட்டாலே போதும் வாய்ப்புண் விரைவில் குணமடையும். கோவைக்காயை பச்சையாக சாப்பிட்டால் அசல் வெள்ளரி பிஞ்சை சாப்பிட்ட சுவை இருக்கும்.  

Leave a Reply