shadow

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்

ராகவா லாரன்ஸ் நடித்த மொட்டசிவா கெட்ட சிவா’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து சென்சாரும் முடிந்து கடந்த மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய நிலையில் திடீரென பைனான்சியர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

பின்னர் சமீபத்தில் நீதிமன்றத்தின் தடையை வென்ற இந்த படம் மார்ச் 10ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென இன்று இந்த படம் நாளை மறுநாள் அதாவது மார்ச் 9ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒருநாள் முன்னதாக ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே பெரிய ஸ்டார்களின் படங்கள் வியாழக்கிழமை ரிலீஸ் ஆகிவரும் நிலையில் ராகவா லாரன்ஸ் படமும் அதே வியாழக்கிழமை ரிலீஸ் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply