மார்ச் 7ஆம் தேதி மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் பர்ஸ்ட்லுக் ரிலீஸ்

மார்ச் 7ஆம் தேதி மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் பர்ஸ்ட்லுக் ரிலீஸ்
motta siva
முனி, முனி 2 காஞ்சனா, காஞ்சனா 2 என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த ராகவா லாரன்ஸ் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

ஜீவா நடித்த ‘சிங்கம்புலி’ படத்தை இயக்கிய இயக்குனர் சாய்ரமணி இயக்கி வரும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ், சதீஷ், கோவை சரளா, மனோபாலா, கோவை சரளா, ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகிய பட்டாஸ்’ படத்தின் ரீமேக் ஆகும்.,

அதிரடி ஆக்ஷன் படமான ‘மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் திங்கட்கிழமை வெளியாகவுள்ளதாகவும், இம்மாத இறுதியில் ஆடியோ ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்த ராகவா லாரன்ஸ், நான்காவது படத்தையும் வெற்றிப்படமாக கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply