shadow

உலகின் வெயிட்டான பெண் குழந்தையை பெற்ற 19 வயது இளம்பெண்

baby
உலகில் இதுவரை பிறந்த பெண் குழந்தைகளில் அதிக எடையுடன் கூடிய குழந்தையை இந்திய இளம்பெண் ஒருவர் பெற்றுள்ளார். இந்த குழந்தை பிறக்கும்போது அதன் எடை 6.8 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னால் அமெரிக்காவில் 6.5 கிலோ எடையுடன் பிறந்த ஒரு குழந்தை அதிக எடையுடன் பிறந்த குழந்தையாக கருதப்பட்டது.

இந்தியாவை சேர்ந்த 19 வயது நந்தினி என்ற இளம்பெண்ணுக்கு இந்த சாதனை குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து கருத்து கூறிய டாக்டர் வெங்அக்டேஷ் ராஜூ, ‘என்னுடைய 25 வருட மெடிக்கல் அனுபவத்தில் இவ்வளவு அதிக எடையுடன் கூடிய குழந்தையை நான் பார்த்ததில்லை. குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளது.

நந்தினிக்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டர் கூறியபோது, இந்த குழந்தை முதலிலேயே எடை அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்ததால் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்தோம். ஆனால் இந்த குழந்தை உலக சாதனை செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

baby1

Leave a Reply