லாக்டவுன் நேரத்தில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற பெண்மணி

200 மில்லியனுக்கு ஒருவருக்குத்தான் இப்படி?

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கேட்டா என்ற 26 வயது பெண்மணி சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவர் நேற்று மூன்று குழந்தைகளை சுகப்பிரசவமாக பெற்றுள்ளார்

இந்த மூன்று குழந்தைகளும் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் தாயும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

எந்தவித சிரமமுமின்றி மூன்று குழந்தைகளை சுகப்பிரசவமாக அவர் பிரசுரித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

200 மில்லியன் பெண்களுக்கு ஒருவருக்கு மட்டுமே மூன்று குழந்தைகள் பிறக்கும் என்றும் அவர்களில் ஒருவராக கேட்டா தனக்கு பெருமையாக இருப்பதாகவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார்

மூன்று குழந்தைகளுக்கும் தேவையான பொருட்களை வாங்குவதற்கு அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருந்த நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாமல் மூன்று குழந்தைகளுக்காக நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply