சென்னையின் எந்தெந்த பகுதியில் கனமழை?

சாலையில் ஓடும் மழை நீர்

சென்னையில் இன்று அதிகாலை முதல் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளான வேளச்சேரி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

மேலும் பூவிருந்தவல்லி, ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், போரூர், திருமுல்லைவாயில், பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் பெருங்களத்தூர், வண்டலூரில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

மேலும் மெரினா, சாந்தோம், மந்தைவெளி, மயிலாப்பூர், பெருங்குடி, கந்தன் சாவடி, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அடையாறு, திருவான்மியூர், அசோக் நகர், ஈசிஆர் சாலை, தி.நகர், மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மத்திய கைலாஷ், ஆலந்தூர், கிண்டி, கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, தாம்பரம், அனகாபுத்தூர், திருவேற்காடு, போரூர், ஆவடி, புழல், செங்குன்றம், திருவள்ளூர், மணவாள நகர், கடம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகம் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடலோர மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் சென்னையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.