ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு பள்ளியில் மர்ம நபர் ஒருவர் புகுந்து மாணவர்களை சிறைபிடித்து வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த மர்ம நபரை போலீஸார் பிடித்து மாணவர்களை மீட்டுவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

நேற்று காலை மாஸ்கோ நகர பள்ளி ஒன்றில் பள்ளி காவலரை மிரட்டிவிட்டு, துப்பாக்கியுடன் பள்ளிக்குள் சென்ற மர்ம நபர், அந்த பள்ளியின் உயிரியல் வகுப்பு மாணவர்களை சிறைபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விரைந்து வந்த போலீஸார், மாணவர்களை மீட்க மர்ம நபருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸாரும், ஒரு ஆசிரியரும் கொல்லப்பட்டனர். பின்னர் அதிரடி படையினரின் முயற்சியால் துப்பாக்கி மனிதன் கைது செய்யப்பட்டான்.

விசாரணையில் அந்த மர்ம மனிதன், அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது தெரியவந்தது. அதன்பின்னர் மாணவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். கைதான முன்னாள் மாணவரிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply