59,04,284 ஆக அதிகரிப்பு

உலகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,04,284 ஆக அதிகரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,61,996 ஆக உயர்ந்துள்ளது என்பதும் ஒரு அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். ஆனால் அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் குணமடைந்தோர் எண்ணிக்கை 25,79,505 ஆக அதிகரித்துள்ளது மட்டும் ஒரு ஆறுதலான செய்தி ஆகும்

உலகில் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 17,68,461 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நாட்டில் மட்டும் கொரோனாவுக்கு 103,330 பேர்கள் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165,386 என்பதும் இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு 4,711பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply