ஒரே நாளில் 43 ஆயிரம் பேருக்கு கொரோனா: முழு ஊரடங்கை தவிர வேறு வழியில்லையா?

தமிழகத்தில் இன்று சுமார் 24 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 43 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மேலும் இன்று ஒரே நாளில் 238 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் மற்றும் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 43,211 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும், இதனை அடுத்து அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு விதிப்பதை தவிர வேறு வழி இல்லை என்றும் அம்மாநில அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது

நாட்டிலேயே மிக அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று மகாராஷ்டிராவில் தான் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது