2.5 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு

அமெரிக்காவில் மேலும் அதிகரிப்பு

உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,24,344ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,58,013ஆக உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 12,39,900ஆக உயர்ந்துள்ளது என்பதும் ஒரு ஆறுதலான செய்தி ஆகும்

அமெரிக்காவில் மேலும் 2,335 பேர் பலியாகியுள்ளதை அடுத்து அந்நாட்டின் உயிரிழப்பு எண்ணிக்கை 72,256ஆக உயர்ந்துள்ளது. மேலும் இத்தாலி, இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் 30 ஆயிரத்தை எட்டுகிறது என்பதும், பிரான்ஸ், ஸ்பெயினில் கொரோனா உயிரிழப்புகள் 25 ஆயிரத்தை தாண்டியது என்பதும் அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்

Leave a Reply