முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மேலும் ஒரு சிக்கல்? ஆட்சிக்கு ஆபத்தா?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மேலும் ஒரு சிக்கல்? ஆட்சிக்கு ஆபத்தா?

அதிமுகவின் இரு அணிகள் இணைந்ததால் ஆத்திரத்தில் இருக்கும் தினகரன் தரப்பினர் ஆட்சியை எந்த நேரமும் கவிழ்க்கவோ அல்லது முதல்வரை மாற்றாவோ வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் தினகரன் அணிக்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவு அதிகமாகி கொண்டே வருவதால் எடப்பாடி அணியினர் ஆட்சியை தக்க வைக்க தீவிர முயற்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர்கள் கவர்னரிடம் எடப்பாடி பழனிச்சாமிக்கு மெஜாரிட்டி இல்லை என்றும், அவரை பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே திமுகவும் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் அழுத்தம் கொடுப்பதால் எடப்பாடி அணிக்கு மேலும் ஒரு சிக்கல் அதிகரித்துள்ளது. இந்த சிக்கல்களில் இருந்து எடப்பாடியார் விடுபடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply