சொந்த ஊருக்கு செல்ல முண்டியடிக்கும் பொதுமக்கள்: இதுதான் கொரோனாவை தடுக்கும் லட்சணமா?

கொரோனா பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. நாளை மாலை 6 மணிக்கு மேல் அமல்படுத்தப்படும் இந்த தடை உத்தரவின்போது காய்கறி, மளிகை, இறைச்சி, ஓட்டல், பால், கடைகள் திறந்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு கடைகள் திறந்தால் எப்படி கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த முடியும் என்று தெரியவில்லை. வெளியே வருபவர்கள் எல்லோரும் பால் வாங்கவும், காய்கறி வாங்கவும், மருந்து வாங்கவும் வருவதாக கூறினால் என்ன செய்ய முடியும்?

மேலும் 144 தடை உத்தரவு அறிவிப்பு வெளிவந்ததுமே அனைத்து சென்னை மக்களும் சொந்த ஊர் செல்ல முண்டியடித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர். தீபாவளி, பொங்கலுக்கு விடுமுறை விட்டதாக நினைத்து கொண்டு சொந்த ஊருக்கு செல்லும் மக்களை பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை. இந்த கூட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கின்றதோ, அவர்கள் இன்னும் எந்தெந்த ஊரில் கொரோனாவை பரப்பப்போகின்றார்களோ தெரியவில்லை

இன்னும் மூன்று வாரத்திற்கு அனைத்து கடைகளையும் அடைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தினமும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் தடை உத்தரவை விலக்கி கொள்ளலாம். அரசு மனிதாபிமானத்தை பார்க்காமல் கடுமையாக செயல்பட்டால் மட்டுமே மனித உயிர்களை காப்பாற்றமுடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். கூட்டம் கூடாமல் தனித்திருப்பதுதான் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வழி என்று பலதரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கூட்டத்தால் நிரம்பி வழிகிறது கோயம்பேடு பேருந்து நிலையம். பரஸ்பரம் ஒத்துழைப்பு இருந்தாயாரைக் குறை சொல்வது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *