கமல் அறிவிப்பை காப்பி அடிக்கும் திமுக, அதிமுக,?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலைவிகளுக்கு மாதம் ஒரு முறை ஊதியம் வழங்கப்படும் என்று கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தான் தற்போது திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளும் மாறிமாறி காப்பி அடித்து அறிவிப்பைச் செய்துள்ளனர்

கடந்த சில நாட்கள் நேற்று முன்தினம் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரத்து 500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி ஆறு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

கமல்ஹாசன் மனதில் தோன்றிய இந்த திட்டத்தை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி காப்பி அடிப்பதை இந்த அறிவிப்புகள் உறுதி செய்கின்றன என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.