shadow

அஜித்-விஷ்ணுவர்தன் இணையும் படத்தில் மோகன்லால்?

ajith2விஜய் நடித்த ‘ஜில்லா’ படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடித்ததை அடுத்து அஜித் படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படும் சரித்திரகதை ஒன்றை இயக்குனர் விஷ்ணுவர்தன் தயார் செய்து வருகிறார். ராஜராஜசோழன் வரலாற்று கதையான இந்த படத்தில் இரண்டு முக்கிய கேரக்டர் இருப்பதாகவும், ஒரு கேரக்டரில் அஜித்தும், இன்னொரு கேரக்டரில் மோகன்லாலும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் திரைக்கதையை இயக்குனர் விஷ்ணுவர்தன் தற்போது பிரபல நாவலாசிரியர் பாலகுமாரனுடன் இணைந்து எழுதி வருகிறார்.அதே நேரத்தில் சிறுத்தை சிவா இயக்கத்திலும் அஜித் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இரண்டும் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வரும் தீபாவளி தினத்திலும், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்திலும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply