ஷமி மனைவியின் முன்னாள் கணவர் விடுத்த வேண்டுகோள்

ஷமி மனைவியின் முன்னாள் கணவர் விடுத்த வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கும் ஹாசின் ஜஹான் என்ற பெண்ணுக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் ஹாசின் ஜஹான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவர் சைஃபுதீன் என்பவரை கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு மேற்கு வங்கத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இதன் காரணமாக விவாகரத்து செய்தனர். விவாகரத்து பெறும் போது இரு குழந்தைகளும் தாயிடம் தான் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஷமியை திருமணம் செய்துகொண்ட பின் குழந்தைகளை ஹாசின் அவரது முன்னாள் கணவரிடம் அனுப்பிவிட்டார்.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது கணவரான் ஷமி மீது ஹாசின் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக தனது ஃபேஸ்புக்கில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைத்தார். ஷமி மீது கொலை முயற்சி, பலாத்காரம், என பல்வேறு பிரிவுகளின் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து ஹாசின் ஜஹானின் முன்னாள் கணவர் கருத்து தெரிவிக்கையில், ‘முகமது ஷமியும், ஹாசின் ஜஹான் தங்களது கருத்து வேறுபாடுகளை கலைத்து மீண்டும் இணைவார்கள் என நம்புகிறேன் என்று கூறினார்.

Leave a Reply