தேவையான பொருட்கள்:

சிக்கன் – அரைக்கிலோ (எலும்பில்லாமல்)
சோளமாவு – ஒரு கப்
இஞ்சி சாறு – ஒரு தேக்கரண்டி
தயிர் – 2 மேசைக்கரண்டி
பூண்டு சாறு – ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
நெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கோழி இறைச்சியினை எலும்புகள் நீக்கி, கழுவி சுத்தம் செய்து துண்டங்களாக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கின இறைச்சி துண்டங்களை வினிகர், இஞ்சி, பூண்டு சாறூ ஆகியவற்றுடன் கலந்து, தேவையான உப்பும் சேர்த்து சுமார் 12 மணி நேரம் ஊறவிட வேண்டும். ஒரு அழுத்தமான ப்ளாஸ்டிக் பையில் சோளமாவினை எடுத்துக் கொண்டு அதில் சிறிது உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு அதில் ஊற வைத்துள்ள கோழித்துண்டங்களை எடுத்துப் போட்டு, பையுடன் நன்கு குலுக்கி கலக்க வேண்டும். ஒரு வாணலியில் நெய்யினை விட்டு நன்கு, அதிக வெப்பத்திற்கு சூடாக்க வேண்டும். அதில் சிறிது கோழித் துண்டங்களைப் போட்டு அதிகத் தீயில் நன்கு பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும். மீண்டும் மீதமுள்ள கோழித் துண்டங்களைப் பொரித்து எடுக்கும் முன், நெய்யினை அதிக சூட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதன் பின்னர் மீதமுள்ள கோழித்துண்டங்களைப் போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.

Leave a Reply