shadow

modi pmஅகில இந்திய அளவில் பாரதிய ஜனதா எந்த கட்சியின் ஆதரவும் இன்றி தனித்து ஆட்சி அமைக்கும் நிலையில் இருக்கிறது. மதியம் 12 மணி நிலவரப்படி பாரதிய ஜனதா 276 இடங்களில் முன்னணி பெற்றுள்ளது. எனவே நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகிறது.

தமிழகத்தை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகள் நல்ல எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வருகிறது. சீமாந்திராவுல் தெலுங்கு தேச கட்சி 17 தொகுதிகளில் முன்னிலை பெற்று விளங்குகிறது.

வதோரோ தொகுதியில் நரேந்திர மோடி 4லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திர வேட்பாளரான வருண்காந்தியும் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா ஒரு தொகுதியிலும், பாமக ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்று வருகிறது.

ஆலந்தூர் சட்டசபை தேர்தலில் அதிமுக முன்னிலை பெற்று வருகிறது.

இதனிடையே பாரதிய ஜனதாவின் ஆட்சி மன்ற கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply