shadow

narendra_modi--621x414--621x414

 

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் நேற்று எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று டெல்லி போலீசார், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகள் 4 பேர்களை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக தெரிய வந்துளது.

நரேந்திர மோடி மீது  மனித வெடிகுண்டு, தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அந்த மனித வெடிகுண்டு ஆணா? பெண்ணா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.. இந்த தாக்குதல் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி அல்லது வதோதரா தொகுதியில் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுருப்பதாக உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், உளவுத்துறை அனைத்து மாநிலங்களுக்கும்  இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோடி பிரசாரம் செய்யும் இடங்களில் பலத்த  பாதுகாப்பு வழங்க போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையை அறிவுறுத்தி உள்ளது. மோடிக்கு தரும் பாதுகாப்பு போலவே  ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கும்  பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply