shadow

modi with wife

கடந்த பிப்ரவரி மாதம் வரை தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொதுக்கூட்டங்களில் முழங்கிவந்த நரேந்திர மோடி, ஏப்ரல் மாதம் தனக்கு மனைவி உண்டு என்றும், அவரது பெயர் யசோதே பென் என்றும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளதால் அகில இந்திய அளவில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதுகுறித்து பல கருத்துக்கள் அரசியல் ரீதியில் பேசப்பட்டாலும், மோடியின் மனைவி என்ன கூறுகிறார் என்பதை மட்டும் நாம் பார்ப்போம்.

ஆசிரியை பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட பின்னர் யசோதா பென், தன் கணவர் பிரதமராக வேண்டும் என்ற வேண்டுதலோடு புனிதப் பயணம் மேற்கொண்டதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும்  தன் கணவரிடம் இருந்து தான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும்  தன்னை அவரது மனைவி என்று மட்டும் சொல்ல வேண்டும் என்பதுதான் அவரது ஒரே பிரார்த்தனை என்றும் கூறியுள்ளார்.. ‘இதுபோதும் எனக்கு! என் பிரார்த்தனை நிறைவேறிவிட்டது’ என்று மகிழ்ச்சியில் பொங்கியுள்ளார் யசோதா பென்.

மோடியின் திருமணம் குறித்து மோடியின் அண்ணன் கூறியதாவது: ”இந்தத் திருமணத்தை இந்தக் காலக்கட்டத்தில் இன்றைய கோணத்தில் இருந்து தயவுசெய்து பார்க்காதீர்கள். இந்தத் திருமணம் நடந்து 40 – 45 ஆண்டுகள் ஆகின்றன. நாகரிகம் எட்டிப்பார்க்காத ஒரு காலத்தில், ஒரு கிராமத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் நடந்த திருமணம் இது” என்று கூறுகிறார்.

திருமணத்தை மறைத்து பொய்யான தகவலை இதுவரை மோடி கூறியுள்ளது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் கூறியது: வேட்புமனுவில் தவறான தகவலைச் சொல்லியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது. அதோடு, தேர்தல் சட்ட விதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும்’

மோடியின் திருமண விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முடிவை பொருத்துதான் அவரது பிரதமர் கனவு அமையும் என கூறப்படுகிறது.

Leave a Reply