ரூபாய் நோட்டு விவகாரம். மோடி மனைவி கூறியது என்ன தெரியுமா?

ரூபாய் நோட்டு விவகாரம். மோடி மனைவி கூறியது என்ன தெரியுமா?

பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு எதிர்க்கட்சியின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள நிலையில் மோடியின் மனைவி இந்த நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் பட்டேல் அவர்களிடம் செய்தியாளர்கள் ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்து கருத்து கேட்டபோது, “பழைய ரூ.500, 1000 ரூபாய் நோட்டு வாபஸால் இந்தியாவில் ஊழல் மற்றும் கருப்பு பணம் ஒழிக்கப்படும். மேலும் இந்த நடவடிக்கையால் வெளிநாட்டிலுள்ள கருப்பு பணம் மீட்க்கப்படும்.” என்று பாராட்டு தெரிவித்தார்.

ரூபாய் நோட்டு நடவடிக்கை மட்டுமின்றி  நாட்டின் வளர்ச்சிக்க்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டுவருவதாகவும் மத்திய அரசு இதுவரை சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகவும், அதற்கு தனது பாராட்டுக்கள் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply