shadow

9உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து போட்டியிட தயார் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நேற்று நடந்த ஆம் ஆத்மி கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் முதல்வரை எதிர்த்து தாம் போட்டிட்டு, அவரை வீழ்த்த வேண்டும் என்று தமது ஆம் ஆத்மி கட்சி விரும்புவதாகவும் இது தொடர்பான இறுதி முடிவை வாரணாசியில் மார்ச் 23-ம் தேதிதான் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மக்களிடம் கருத்து கேட்ட பிறகு, மோடியை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

வருகிற 23ஆம் தேதி தாம் வாரணாசி செல்வதாகவும், அப்போது அங்கு நடைபெறும் மாபெரும் பேரணியில் கலந்துவிட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்டபின்னர் மோடிய எதிர்த்து நிற்பது குறித்து முடிவு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply