shadow

சென்னை, ஓசூரில் மோடி பிரச்சாரம். திமுக, அதிமுகவை நேரடியாக விமர்சிக்காதது ஏன்?

modiதமிழக தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் உள்ளது. தேசிய தலைவர்கள் தமிழகம் நோக்கி வரத்தொடங்கிவிட்டனர். நேற்று முன் தினம் சோனியாகாந்தி தமிழகத்தில் பிரச்சாரம் செய்த நிலையில் நேற்று பிரதமர் மோடி, பாரதிய ஜனதாவுக்காக பிரச்சாரம் செய்தார். ஓசூர் மற்றும் சென்னையில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் அவர் ஆவேசமாக சில கருத்துக்களை கூறியுள்ளார்.

நேற்று மாலை ஓசூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மோடி பேசியதாவது, “‘தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. நிலக்கரி துறை, 2ஜி, 3ஜி என அனைத்திலும் ஊழல் செய்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சி மீது எந்த ஊழல் புகாரும் இல்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் யூரியா, கேஸ் சிலிண்டர் ஊழலை ஒழித்தோம். தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வங்கிகளுக்கு ஏழைகள் செல்ல முடியாத நிலையே பல ஆண்டுகளாக நீடித்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகே ஏழைகள் வங்கிகளுக்கு செல்ல முடிந்தது. சிறு வியாபாரிகளுக்கு வங்கிகளில் கடன் கிடைக்காத நிலை இருந்தது. அவர்களுக்காக முத்ரா வங்கி தொடங்கி, அதன் மூலம் ரூ.1.30 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது விரைந்து வந்து உதவி செய்தேன். தமிழகத்தில் 3வது சக்தியாக பாரதிய ஜனதா உருவெடுத்துள்ளது” என்று பேசியவர் அனைத்து பா.ஜ.க வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நேற்றைய மோடி பேச்சில் எந்த இடத்திலும் திமுகவையோ அல்லது அதிமுகவையோ அவர் பெயர் குறிப்பிட்டு விமர்சனம் செய்யவில்லை. அதேபோல் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply