மோடிக்கு இணையாக உலக அளவில் பிரபலமான மம்தா!

டைம்ஸ் ஊடகம் எடுத்த உலகின் 100 பிரபலங்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பெயர்கள் இடம் பெற்றுள்ளது

டைம்ஸ் என்ற ஊடகம் சமீபத்தில் 2021 ஆம் ஆண்டில் உலக அளவில் புகழ் பெற்றவர்கள் என்ற பட்டியலை எடுத்தது. இந்த பட்டியலில் மோடியின் பெயர் ஏற்கனவே 2014, 2015, 2017, 2020 ஆகிய ஆண்டுகளில் இருந்த நிலையில் இந்த ஆண்டும் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் இந்த பட்டியலில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது

மேலும் இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் பிரின்ஸ் ஹாரிஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.