நடமாடும் அம்மா கடைகள்:

தமிழக அரசின் புதிய முயற்சி

தமிழக அரசின் புதிய முயற்சியாக தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் அம்மா கடைகளை திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திறக்கப்படும் 3,501 நடமாடும் ரேஷன் கடைகளால் சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர் என்றும், நடமாடும் ரேஷன் கடைகள் செயல்படும் இடம்,நேரம்,நாட்களுக்கு ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

‘நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை அரசு கட்டடம், உள்ளாட்சி நிறுவன கட்டடம், மக்கள் கூடும் இடங்களில் திறக்கலாம் என்றும் நடமாடும் ரேஷன் கடைகள் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆக.20க்குள் அறிக்கை தர வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply