கொரோனா வைரஸ் எதிரொலி: மொபைல் போன் வழியாக திருமணம்

சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அவரால் சரியான நேரத்தில் திருமணத்திற்கு வர முடியவில்லை என்பதால் அவருக்கு மொபைல் மூலம் திருமணம் செய்து வைக்கப்பட்டது

சவுதி அரேபியாவில் பணியாற்றும் ஐதராபாத்தை சேர்ந்த முஹம்மது அத்னன்கான் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. திருமண நாள் நெருங்க நெருங்க அவர் இந்தியாவுக்கு வர முயற்சி செய்தும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவரால் வர முடியவில்லை

இதனை அடுத்து முகமது அத்னன்கான், மொபைல் போனில் வீடியோ காலில் வர அவருக்கும் மணப்பெண்ணுக்கும் இஸ்லாமிய முறைப்படி மொபைல் போனிலேயே சடங்குகள் செய்யப்பட்டன மேலும் மொபைல் போன் மூலமே திருமணமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply