ஆசிரியர்களுக்காக பிரத்யேக செயலி- பள்ளி கல்வித் துறை

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணி சார்ந்த சேவைகளை சிரமமின்றி பெற்றிட பள்ளி கல்வித் துறை முயற்சி எடுத்துள்ளது.

இதற்காக, TNSED-Schools என்ற செல்ஃபோன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த செயலி மூலம் விடுப்பு கோருவது, பல்வேறு வகையான பணி அலுவல்களை மேற்கொள்ள முடியும்.

இதை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்பெற பள்ளி கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.