புத்தாண்டு வாழ்த்து அனுப்பிய முக ஸ்டாலினுக்கு கமல் ரசிகர்களின் பதிலடி

புத்தாண்டு வாழ்த்து அனுப்பிய முக ஸ்டாலினுக்கு கமல் ரசிகர்களின் பதிலடி

புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய சக நண்பர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை கடிதம் மூலம் அனுப்பி வைக்கிறார்

அந்த வகையில் கமல்ஹாசனுக்கு அவர் அனுப்பிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக் கடிதத்தில் முகவரி பகுதியில் ’கமலஹாசன் நடிகர்’ என்று குறிப்பிட்டுள்ளார்

கமலஹாசன் நடிகர் மட்டுமின்றி தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் அவரை நடிகர் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது மக்கள் நீதி மைய கட்சி தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி ஒருவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எங்கள் தலைவருக்கு தாங்கள் @mkstalin அனுப்பிய பொங்கல் வாழ்த்து கிடைத்தது. தலைவரிடம் சேர்த்து விட்டோம். தங்களுக்கு எங்கள் நன்றியும் வாழ்த்துகளும்.

குறிப்பு : நடிகர் @Udhaystalin க்கு எங்கள் வாழ்த்துகள். என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply