shadow

மீண்டும் அரசியல் குழப்பமா? அதிருப்தி எம்.எல்.ஏக்களால் அரசு கவிழும் ஆபத்து?

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிரிந்து ஒருவழியாக சசிகலா அணி சட்டமன்றத்தில் 122 எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு ஆதரவு என நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த 122 எம்.எல்.ஏக்களில் ஒருசிலர் பலவந்தமாக வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வைக்கப்பட்டதாகவும், அதிருப்தியில் உள்ள அவர்கள் எந்த நேரத்திலும் வெளியேறும் ஆபத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக சொந்த் தொகுதிக்கு சென்று மக்களின் பெரும் அதிருப்தியை சந்தித்த கருணாஸ் எம்.எல்.ஏவுக்கு தொகுதியில் மட்டுமின்றி வீட்டிலும் எதிர்ப்பு காணப்படுகிறதாம். அதேபோல் தோப்பு வெங்கடாச்சலம், கர்ணாஸ், தனியரசு, தமிமும் அன்சாரி ஆகியோர்களும் சசிகலா அணிக்கு ஆதரவு தருவதை விரும்பவில்லை.

நேற்று டிடிவி தினகரன் தலையில் கூடிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருசில எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வந்துள்ளது. எனவே 122 எம்.எல்.ஏக்களில் 4 அல்லது 5 எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் வெளியேறினால் ஆட்சி கவிழும் ஆபத்து இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply