முதல்வருக்கும் பரவியிருக்குமோ என்ற அச்சம்

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் காந்தி நகரில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் நிதின் பட்டேல், மாநில உள்துறை அமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஹாடியா-ஜமால்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரான் ஹிடவால என்பவருக்கு திடீரென கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் உள்பட அனைவருக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

Leave a Reply