முதல்வர் நாற்காலியில் திடீரென உட்கார்ந்த நடிகர் பாலகிருஷ்ணா: ஆந்திராவில் பரபரப்பு

முதல்வர் நாற்காலியில் திடீரென உட்கார்ந்த நடிகர் பாலகிருஷ்ணா: ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்து வரும் நிலையில் அவருடைய நாற்காலியில் அவருடைய மைத்துனரும், பிரபல நடிகருமான என்.டி.ஆர். பால்கிருஷ்ணா உட்கார்ந்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிகழ்ச்சியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏஆக உள்ள நடிகர் பாலகிருஷ்ணா சமீபத்தில் விஜயவாடாவில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கிருந்த முதல்வரின் நாற்காலியில் உட்கார்ந்து கொண்ட பாலகிருஷ்ணா, பின்னர் அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒருசில அமைச்சர்களும் கலந்து கொண்டனர். முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் என்பதால் அமைச்சர்களும் இதனை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.