shadow

images (2)

சென்னை: எம்.எல்., முதுகலை படிப்பில் சேர, அக்., 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி, சென்னை பல்கலை அறிவித்துள்ளது. 

பி.எல்., முடித்தவர்களுக்கான எம்.எல்., முதுகலை படிப்பை,தனிப்படிப்பாக சென்னை பல்கலை நடத்துகிறது. இதில் சேர, பிளஸ்2 முடித்த பின், பி.எல்., முடித்திருக்க வேண்டும். சர்வதேச மற்றும் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம், அறிவுசார் சொத்துரிமை சட்டம், மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் சட்டம்,தொழிலாளர் மற்றும் நிர்வாக சட்டம் என, ஐந்து பாடப் பிரிவுகள் உண்டு.நடப்பு கல்வியாண்டில், எம்.எல்., படிப்பில் சேர, அக்., 30ம் தேதிக்குள், விண்ணப்பம் அளிக்க வேண்டும். 

விண்ணப்பங்களை, சென்னை பல்கலையின், www.unom.ac.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம், 200 ரூபாயை வங்கி வரைவோலை எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். மேலும் சென்னை பல்கலையில் நேரடியாகவும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply