shadow

14abபாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிந்தவுடன் நேற்று தமிழக முதல்வர் ஓய்வு எடுக்க கொடநாடு சென்றிருக்கும் நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் ஹாங்காங் சென்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காக சனிக்கிழமை நள்ளிரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி துர்கா மற்றும் குடும்பத்தாரும் சென்றனர்.

முன்னதாக விமான நிலையத்தில் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா கொடநாடு சென்றிருப்பது குறித்து கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஸ்டாலின், முதல்வர் கொடநாடு செல்வது வழக்கமான ஒன்றுதான். அதில் அதிருப்தி அடைவதற்கு ஒன்றுமில்லை என்று கூறினார். தேர்தல் அமைதியான முறையில் நடந்ததா என்பது குறித்து நாட்டு மக்கள்தான் சொல்ல வேண்டும் என்றார். மேலும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தது குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Leave a Reply