அமைச்சர் செங்கோட்டையனுடன் முக ஸ்டாலின் முக்கிய பேச்சு: பரபரப்பு தகவல்

அமைச்சர் செங்கோட்டையனுடன் முக ஸ்டாலின் முக்கிய பேச்சு: பரபரப்பு தகவல்

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களாகவே 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஆனால் பத்தாம் வகுப்பு தேர்வை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒத்திவைத்த தமிழக அரசு, 11ஆம் வகுப்பு தேர்வையும் தற்போது நிறுத்தி வைக்க உத்தரவிட்டது

ஆனால் அதே நேரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ’மாணவர்களின் நலன் கருதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் முதல்வரிடம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.