இருக்குற குழப்பம் போதாதுன்னு செங்கோட்டையனும் குழப்பனுமா?

முக ஸ்டாலின் கேள்வி

இன்று காலை பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கு என்ன அவசரம்? என்றும், கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் இந்த நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த வேண்டுமா? என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தன் பங்கிற்கு குழப்பத்தை அதிகப்படுத்துவது நியாயமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்ப்பை தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும் வலியுறுத்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.