முக்கிய பதவியில் இருந்து விலகினார் மு.க.ஸ்டாலின்

முக்கிய பதவியில் இருந்து விலகினார் மு.க.ஸ்டாலின்

சமீபத்தில் திமுகவின் செயல் தலைவர் என்ற பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் கடந்த பல ஆண்டுகளாக வகித்து வந்த திமுக இளைஞரணி செயலாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இந்த பதவிக்கு முன்னாள் அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே திமுக இளைஞரணி இணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக இளளஞரணியின் இணைச் செயலாளராக சுபா.சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

மேலும் திமுக பொருளாளர் பதவியில் மு.க.ஸ்டாலினே தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply