குடியுரிமை சட்டம்: முக ஸ்டாலினின் அடுத்த அதிரடி

குடியுரிமை சட்டம்: முக ஸ்டாலினின் அடுத்த அதிரடி

குடியுரிமை சீர்திருத்த சட்டம் சமீபத்தில் மத்திய அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமல்படுத்திய நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து போராடிவரும் கட்சிகளில் முக்கியமான கட்சியாக திமுக உள்ளது

இந்த சட்டத்தை எதிர்த்து மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்பிக்கள் வாக்களித்தார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த சட்டத்தை எதிர்ப்பதில் திமுக தலைவர் உறுதியாக உள்ளார் என்பது மட்டும் தெரிகிறது

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த சட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டம் தமிழகமெங்கும் நடந்த நிலையில் இன்று முக ஸ்டாலின் தலைமையில் இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் முக ஸ்டாலினும் மற்ற இடங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளும் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்குவார்கள் என்றும் இந்த போராட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply