பெல்ஜியம் குண்டுவெடிப்பில் காணாமல் போன தமிழர் பரிதாப மரணம்.

பெல்ஜியம் குண்டுவெடிப்பில் காணாமல் போன தமிழர் பரிதாப மரணம்.

belgium1பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸ் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற மனித குண்டுவெடிப்பின் போது காணாமல் போன தமிழர் ராகவேந்திரன் கணேசன் மரணம் அடைந்துவிட்டார் என்பதை பெல்ஜியத்துக்கான இந்தியத் தூதர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் ராகவேந்திரன் கணேசனின் குடும்பத்தினர் மீளாத்துயரில் உள்ளனர்.

பெல்ஜியத்தின் தலைநகர் பிரெஸ்ஸெல்ஸ் நகரில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த ராகேவந்திரன் கணேசன் திடீரென மாயமானதாக அவரது தாயார் தெரிவித்திருந்தார். குண்டுவெடிப்புக்கு சில நிமிடங்கள் முன் தன்னுடன் கணேசன் பேசியதாகவும் அதன்பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரஸ்ஸெல்ஸ் நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் கணசேன் பரிதாபமாக மரணம் அடைந்தார் என்றும் அவரது உடல் பெல்ஜியம் அதிகாரிகளால் இன்று அடையாளம் காணப்பட்டதாகவும் பெல்ஜியத்துக்கான இந்திய தூதர் மாஞ்சீவ் சிங் புரி உறுதி செய்துள்ளார். ராகவேந்திரன் கணேசன் உடல் அம்ஸ்டர்டாம் வழியாக இந்தியா கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸ் நகரில் இன்போசிஸ் நிறுவனத்தில் ராகவேந்திரன் கணேசன் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி சென்னையில் உள்ளார். கணேசனுக்கு கடந்த பிப்ரவரி மாதம்தான் குழந்தைப் பிறந்தது. குழந்தையைப் பார்ப்பதற்காக கணேசன் கடந்த மாதம் சென்னை வந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply