shadow

19வயது போர்டோ ரிகா நாட்டை இளம்பெண் உலக அழகியாக தேர்வு

2016ஆம் ஆண்டின் உலக அழகியாக 19 வயது போர்டோ ரிகா நாட்டை சேர்ந்த ஸ்டெபானி டெல் வாலே என்ற 19 வயது இளம்பெண் உலக அழகி பட்டம் வென்றார். இவருக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த ஆண்டின் உலக அழகியை தேர்வு செய்ய பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்று அமெரிக் காவின் மேரி லேண்டில் உள்ள அக்சான் கில்நகரில் நடந்தது. உலக அழகிக்கான இறுதி போட்டியில் தேர்வான கென்யா, பிலிப்பைன்ஸ், போர்டோரிகா, டொமிகன் குடியரசு மற்றும் இந்தோனேசியா ஆகிய ஐந்து நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியின் முடிவு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டின் உலக அழகியாக போர்டோ ரிகா நாட்டை சேர்ந்த ஸ்டெபானி டெல் வாலே என்பவர் தேர்வு செய்யப்பட்டார். உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு 2015-ம் ஆண்டு பட்டம் வென்ற ஸ்பெயின் அழகி மிரேயா லலாகுனா கிரீடம் சூட்டினார்

Leave a Reply