shadow

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பல்மருத்துவ மாணவி

ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக நடைபெற்று வரும் ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகி பட்டத்துக்கான இந்த ஆண்டு போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ் மிட்டனேரே வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பிரான்ஸ் அதிபர் உள்பட உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

2017-ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் நம்பர் ஒன் அழகியை தேர்வு செய்யும் இறுதி போட்டி நேற்றிரவு நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐரிஷ் மிட்டனரே மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2வது இடத்தை ஹைதி நாட்டைச் சேர்ந்த ரகுவல் பெலிசியர் என்பவரும், 3வது இடத்தை கொலம்பியா நாட்டின் ஆண்ட்ரியா டோவரும் பெற்றனர்.

பெர்சியா வம்சாவளியை சேர்ந்த மிஸ் யுனிவர்ஸ் மிட்டனரே, பல் அறுவை சிகிச்சை குறித்த பட்டப்படிப்பை படித்து வருகிறார். தன்னுடைய பிரபஞ்ச அழகி பட்டத்தின் மூலம், பற்கள் சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply