டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு: அமைச்சர் தகவல்

டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு: அமைச்சர் தகவல்

டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா பாதிப்புடன் ஒருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் இரண்டாவதாக ஒரு நபர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் கொரோனா பாதிப்பு அடைந்த நபர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply