மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழ்நாட்டில் இனி மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்றும், இரண்டு மாதங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.