ரஜினிக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி

ரஜினிக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று பேட்டியளித்தபோது, ‘மற்ற மாநிலங்களில் உள்ள கல்வி வளர்ச்சியைவிட தமிழகத்தில் கல்வியின் தரம் நன்றாக இருப்பதாகவும் குறிப்பாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நன்றாக செயல்படுவதாகவும் பாராட்டு தெரிவித்தார். 8 வழிச்சாலைக்கு ஆதரவு, செங்கோட்டையனுக்கு பாராட்டு என ரஜினி தனது பேட்டியில் கூறியது அவரை அதிமுக ஆதரவாளராக மாற்றிவிட்டதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியபோது, பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறிய நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழக அரசின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்தி முடிவு எடுப்பார் என்றும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு இந்த ஆண்டு நடத்தப்படும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.