கமல்ஹாசனை பார்த்து வேதனைப்படுகிறேன்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

கமல்ஹாசனை பார்த்து வேதனைப்படுகிறேன்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

கமல்ஹாசனை பார்த்தால் வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருப்பதாக தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் மற்றும் காவிரி குறித்து இத்தனை ஆண்டுகளாக வாய் திறக்காமல் இருந்த கமல், தற்போது திடீரென அதற்காக போராடுவது சந்தர்ப்பவாத்தை காட்டுவதாக அதிமுகவினர் ஏற்கனவே கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘இத்தனை ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டை பற்றி பேசாத நடிகர் கமல், தற்பொழுது போராடும் மக்களிடம் பேசுவதைப் பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருப்பதாகவும், கமல்ஹாசன் பேசுவது யாருக்குமே புரியாது. வசனம் எழுதிக் கொடுத்தால் பேசக்கூடியவர்” என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்

மேலும் எத்தனை முறை தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க-தான் வெற்றிபெறும், மற்றவர்கள் அனைவரும் ஜீரோதான் என்று கூறிய அமைச்ச்சர், காவிரி விவகாரத்தில் கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published.