தீபாவளிக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

Tamil-Nadu_bus

தீபாவளி திருநாள் வரும் நவம்பர் 4ஆம் தேதி அன்று பொதுமக்கள் கொண்டாட உள்ளனர். இதனை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர்களில் மொத்தம் ஆறு இடங்களில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்கப்படும் என்றும் அமைச்சர் கண்ணப்பன் தகவல் செய்துள்ளார்

சிறப்பு பேருந்துகள் முன்பதிவு சமீபத்தில் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்ப்பிடத்தக்கது.