செங்கோட்டையன் கூறிவது நடைமுறைக்கு சாத்தியம் அல்ல அமைச்சர் ஜெயக்குமார்

செங்கோட்டையன் கூறிவது நடைமுறைக்கு சாத்தியம் அல்ல அமைச்சர் ஜெயக்குமார்

சமீபத்தில் அதிமுக கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக தொண்டர்கள் கூறுபவர்களுக்கு தான் வேலைவாய்ப்பு மற்றும் ஒப்பந்தம் கிடைக்கும் என்று பேசியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

செங்கோட்டையன் கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்துவதற்காக தொண்டர்கள் கூறுபவர்களுக்கு தான் வேலைவாய்ப்பு என்று கூறி இருப்பார். ஆனால் நடைமுறைக்கு இது சாத்தியம் அல்ல. வேலைவாய்ப்பு, ஒப்பந்தம் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையோடு தான் இந்த அரசு செயல்படுகிறது’ என்று கூறினார்.

மேலும் ஜெயலலிதா அரசு கிராமங்களின் முன்னேற்றத்தில் மிக கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து வசதிகளையும் இந்த அரசு செய்து தந்துள்ளது. அரசோடு கைகோர்க்கும் வகையில் நடிகர் கமல்ஹாசனோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ வருவது நல்ல விஷயம் தான் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published.